கிருஷ்ணகிரி

மத்திய சிறுபான்மை துறை துணைச் செயலர் ஆய்வு

DIN

வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மை குறித்து மத்திய சிறுபான்மை துறை துணை செயலர் மொய்னா பெனாசிர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குரியனப்பள்ளி, கரியசந்திரம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை பணிகளை மத்திய சிறுபான்மைத் துறை துணை செயலர் மொய்னா பெனாசிர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வறண்ட ஆழ்துளைக் கிணறு அருகில் மழை நீர் சேகரிப்பு உறிஞ்சுக் குழி அமைக்கப்பட்டுள்ளதை அவர் பார்வையிட்டார். மேலும், மழைநீர் சேகரிப்பு தடுப்பணைகள், மழை நீர் உறிஞ்சுக் குழிகளை ஆய்வு செய்த அவர், மரக் கன்றுகளையும் நட்டார்.
முன்னதாக, குரியனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியருடன் சேர்ந்து நீர் மேலாண்மை குறித்து
உறுதிமொழியேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT