கிருஷ்ணகிரி

எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வை டிவி மூலம் பார்த்த அரசுப் பள்ளி மாணவர்கள்

DIN

மக்களவையில்  தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வை,  ஸ்மார்ட் டிவி மூலம், அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பார்த்தனர்.
பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டம், திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பதவியேற்றனர். இதையடுத்து,  2 - ஆம் நாள் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றனர். 
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சவுளூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மீத்திறன் காட்சிப் பெட்டி (ஸ்மார்ட் டிவி) மூலம், தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வை அந்த பள்ளியில் பயிலும் 6, 7, 8 - ஆவது வகுப்புகளைச் சேர்ந்த 58 மாணவ, மாணவியர் பார்த்தனர். 
இந்த  நிகழ்வை பள்ளித் தலைமையாசிரியர் சா.வசந்தி, தொடங்கி வைத்தார்.  ஆசிரியர் சுகவன முருகன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இதைத்  தொடர்ந்து, மாலை இறைவணக்கம் கூட்டத்தில், மழை வேண்டி, கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT