கிருஷ்ணகிரி

கோதண்டராம சுவாமி கோயில் தேரோட்டம்

DIN

வேப்பனப்பள்ளி அருகே பூதிமுட்லு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராம சுவாமி வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை தேரில் உற்சவ மூர்த்திகள்
அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதில் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்தும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அன்னதானமும், தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர். வெள்ளிக்கிழமை பல்லக்கு தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT