கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

ஒசூர் அருகே எம். தொட்டி கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்று மற்றும்  மழையினால் 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. 

DIN

ஒசூர் அருகே எம். தொட்டி கிராமத்தில் திங்கள்கிழமை பலத்த காற்று மற்றும்  மழையினால் 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. 
ஒசூர் கோட்டம்,  சூளகிரி வட்டம், எம். தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  மாதப்பன். இவர் தனது தோட்டத்தில் 5 ஏக்கரில் 5,500- க்கும் மேற்பட்ட  வாழை மரங்களை பயிரிட்டிருந்தார்.  இந்த  வாழை மரங்கள் அனைத்தும்  இன்னும் 2 மாதங்களில் குலைகள் தள்ளி அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நிலையில் சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த சூறைக் காற்று மழை பெய்ததில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளும் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயி மாதப்பனுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே  வாழை மரங்களினால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சரிசெய்ய தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT