கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி திட்ட நிறைவு விழா

ஊத்தங்கரை  ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி திட்ட நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

DIN

ஊத்தங்கரை  ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் மாணவ விஞ்ஞானி திட்ட நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் கடந்த 3-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழாவில் இளம் மாணவ விஞ்ஞானி திட்ட ஒருங்கிணைப்பாளாரும், இயற்பியல் துறை தலைவியுமான முனைவர் இரா. அறிவுசெல்வி திட்ட அறிக்கை வாசித்தார்.கல்லூரியின் செயலாளர் ஆர்.பி. ராஜீ,  துணைச் செயலர் பெ. வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் க. அருள் தலைமையுரையாற்றினார். சென்னை எஸ்.டி.பீட்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை  புலத் தலைவர் குணசேகரன் சிறப்புரையாற்றினார்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர் முத்துசாமி, திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் ரவி, நாமக்கல் கந்தசாமி கண்டர் கல்லூரியைச் சேர்ந்த விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முத்துசாமி, தருமபுரி பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் இயற்பியல் துறை இணை பேராசிரியர் முனைவர் மா. செல்வபாண்டியன்,  ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கணிதத் துறை தலைவர் ராகவன், வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் தயானந்தன், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ்,  விலங்கியல் துறை பேராசிரியர் ராயப்பன் ஆகியோர் பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT