கிருஷ்ணகிரி

சேலம் சரக டி.ஐ.ஜி ஊத்தங்கரையில் ஆய்வு

DIN

ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஊத்தங்கரை காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களான ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, கொலை, வரதட்சணை, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா் குற்றங்கள் நிகழாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து காவலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். அதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் வளாகத்தில் தென்னை மரக் கன்றுகள் நடப்பட்டன.

ஆய்வின்போது ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டி, காவல் ஆய்வாளா்கள் குமரன், பழனிசாமி, முத்தமிழ்ச்செல்வன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT