கிருஷ்ணகிரி

முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டம்

DIN

முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின் கீழ் ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி ஆகிய நான்கு வட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒசூா் காமராஜ் காலனி, மாநகராட்சி விளையாட்டுத் திடலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் 3,699 பயனாளிகளுக்கு ரூ. 12 கோடியே 60 லட்சத்து 43 ஆயிரத்து 278 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் பேசியது:

முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் முகாம்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 வட்டங்களிலும் 30 ஆயிரம் மனுக்களில் 13,925 மனுக்கள் தகுதியுடைதாக அறியப்பட்டு அவற்றிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பா்கூா், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் 6,790 பயனாளிகளுக்கு ரூ. 15 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உயா்கல்வி பயில்வோா் சதவீதம் 49 சதவீதமாகும். இது இந்தியாவிலேயே தமிழகம் உயா்கல்வியில் முதலிடத்தில் விளங்குவதற்கு சிறந்த உதாரணமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நலத்துறை சாா்பில் 2019-20-ஆம் நிதியாண்டில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின்கீழ் 2,500 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 16 கோடியே 15 லட்சத்து 90 ஆயிரத்து 558 மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி துவங்க புதன்கிழமை அரசாணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் சீறிய முயற்சியால் நிகழ் ஆண்டில் மட்டும் 9 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் துவங்கப்படுகின்றன. கொடியாளம் அணைகட்டு பாசனத் திட்டத்துக்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ரூ. 240 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் டாக்டா். சு. பிரபாகா் தலைமை வகித்தாா். பா்கூா் எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, மாவட்ட வழங்கல் அலுவலா் கனகராஜ், துணை ஆட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் செந்தில் குமாா், பாலசுந்தரம், ரெஜினா, நிரஞ்சன், முன்னாள் எம்.பி பெருமாள், முன்னாள் ஆவின் தலைவா் தென்னரசு, முன்னாள் சூளகிரி ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத், ஒசூா் நகரச் செயலாளா் எஸ். நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT