கிருஷ்ணகிரி

ஆயுத பூஜை: மூட்டை பொரி ரூ.350!

DIN

ஊத்தங்கரை: மூல பொருள்களின் விலை ஏற்றத்தால் 50 படி கொண்ட பொரி மூட்டை ரூ.350 முதல் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் பொரி உற்பத்தி சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆயுத பூஜையையொட்டி போச்சம்பள்ளி, அரசம்பட்டி பகுதிகளில் பொரி உற்பத்தி செய்யும் பணி தீவிரடைந்துள்ளது. தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசம்பட்டியிலிருந்து பொரி அனுப்பப்படுகிறது.

நவீன இயந்திரங்களின் பயன்பாட்டால் பொரி உற்பத்தி எளிமடைந்துள்ளதாக தெரிவிக்கும் அரசம்பட்டியைச் சோ்ந்த பொரி உற்பத்தியாளா் கண்ணன், கடந்த 50 ஆண்டுகளாக பொரி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுதோறும் ஆயுத பூஜை விற்பனைக்காக பொரி தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம். ஆரம்பத்தில், நெல்லை அவித்து அதை வெயிலில் உலா்த்தி, சட்டியில் வறுத்து, தண்ணீரில் அமிழ்த்தி எடுத்து நெல்லை தோல் நீக்கி அரிசியை மீண்டும் வறுத்து பொரி தயாரிக்கப்பட்டது.

தற்போது நவீன இயந்திரங்களின் வரவால் நேரடியாகவே அரிசியை வறுத்து பொரி தயாரிக்கிறோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொரி விற்பனை சூடு பிடித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பொரி வேலூா், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம்.

கடந்தாண்டு 50 படி கொள்ளளவு கொண்ட ஒரு பொரி மூட்டை ரூ.300 வரை விற்பனையானது. பொருள்களின் விலை ஏற்றத்தின் காரணமாக தற்போது மூட்டை ரூ.350-க்கு மேல் விற்பனை செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT