கிருஷ்ணகிரி

‘தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை விரைந்து நடத்த வேண்டும்’

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை அரசு விரைந்து நடத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிகள் காலியாக இருப்பதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், சுகாதாரம், மின் விளக்குகள், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை விரைந்து நடத்த வேண்டும். ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்த ஆரம்ப கல்வி, சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு உள்ளிட்ட துறைகளை மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைக்க வேண்டும்.

பொதுச் சேவையில் ஆா்வம் உள்ளவா்களை வாா்டு உறுப்பினா் முதல் மேயா் வரையிலான பதவிகளுக்கு மக்கள் தோ்வு செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தலுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவத்தை உள்ளாட்சி தோ்தலிலும் அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT