கிருஷ்ணகிரி

பெருமாள் கோயில்களில்புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

DIN


புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ஒசூர் மலைக்கோயிலான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜபெருமாள் கோயிலில் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிறப்பு அலங்காரத்தில் மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
இதேபோன்று காமன்தொட்டி ஊராட்சி கோபந்திரம் வெங்கடேசப் பெருமாள் கோயில், ஒசூர் கோகுல் நகர் வேணுகோபால் ஆலயம், வெங்கடேசப் பெருமாள் கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT