ஊத்தங்கரை: கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
ஊத்தங்கரை காந்திநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
ஊத்தங்கரை காந்திநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காந்திநகர் பகுதியில் ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிர்மலா கந்தசாமி தலைமையில் திமுகவினர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் காந்தி நகர் கிளை செயலாளர்கள் கே பெருமாள், பி.மாதையன், ராஜாமணி, சங்கர், பழனிசாமி சின்ன பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்