முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கொலை

கிருஷ்ணகிரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன். முன்னாள் ராணுவ வீரரான இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (40). இந்த தம்பதிக்கு பதினெட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். 

இந்த நிலையில் நாகலட்சுமி, இன்று தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →