முகப்பு
இந்தியா

ஹோர்முஸ் நீரிணை திறப்பு: நாளை இந்தியா வந்தடையும் 2 சரக்கு கப்பல்கள்!

பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேறிய 2 சரக்கு கப்பல்கள் நாளை இந்தியா வருகை

Updated On : 16 மார்ச் 2026, 7:24 pm IST
சரக்கு கப்பல்கள் - AP
பகிர்:

நந்தா தேவி மற்றும் ஜக் லாட்கி ஆகிய இரு சரக்கு கப்பல்களும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இந்திய துறைமுகங்களை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்திய கொடியேந்திய 28 சரக்கு கப்பல்களில் 4-ஆவது கப்பலாக ஜக் லாட்கி நாளை இந்தியாவை வந்தடைய உள்ளது. அதில், சுமார் 80,800 டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அந்தக் கப்பலில் உள்ள 22 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃப்யூஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜக் லாட்கி, அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கப்பல் முந்த்ரா துறைமுகத்தை நாளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, நந்தா தேவி நாளை காலை கந்த்லா துறைமுகத்தை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

summary

An Indian-flagged crude oil tanker that sailed safely from the UAE's Fujairah port despite an attack on the terminal is scheduled to reach India on Tuesday, a senior official said

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.