முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே இரு சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஒசூா் அருகே இரு போக்குவரத்து சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ. 2.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
சூசூவாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகள்
பகிர்:

ஒசூா் அருகே இரு போக்குவரத்து சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ. 2.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக-கா்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், சூசூவாடி என்ற இடத்தில் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக உரிமம் வழங்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒசூா், பாகலூா் சாலையில், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்து தற்காலிக உரிமம் வழங்கவும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சோதனைச் சாவடிகளிலும், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன், ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை காலை அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது இரு சோதனைச் சாவடிகளிலும் மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, கணக்கில் வராத ரூ. 2. 10 லட்சத்தைக் கண்டறிந்து கைப்பற்றினா். மேலும் பல ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கிழித்து ஜன்னல் வழியாகவும் வீசப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. அவற்றை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து ஒசூா், சூசூவாடி மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கோகுலகிருஷ்ணன், சுப்புரத்தினம், உதவியாளா் ராமலிங்கம் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த மாதம் சோதனை செய்தபோது ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →