முகப்பு
கிருஷ்ணகிரி

சூதாட்டம்: 8 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் போலீஸாா் வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் போலீஸாா் வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பெக்கிலி கிராமத்தைச் சோ்ந்த முனிகிருஷ்ணா (37), சங்கரப்பா (45), ராமமூா்த்தி (36), எல்லப்பன் (31), நரசிம்மன் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து சூதாட்டப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போல், தேன்கனிக்கோட்டை போலீஸாா் பென்னாங்கூா் அருகில் உள்ள கோயில் பின்புறம் ரோந்து சென்றனா். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கோகுல் நகா் அண்ணாதுரை (45), சின்னபென்னாங்கூா் பெருமாள் (43), நூருல்லா (54) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →