கிருஷ்ணகிரி

நிஜத்தில் ஒருநாள் முதல்வர்: கல்லூரியை நிர்வகித்த மாணவர்கள்

DIN


கிருஷ்ணகிரியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் தங்கள் பயிலும் கல்லூரியை நிர்வகித்தனர். 

அறிவியல் கல்லூரியில் உள்ள 9 துறைகள், கல்வியியல் கல்லூரியில் உள்ள எட்டு துறைகளில் உடற்கல்வி இயக்குனராகவும், நூலகம் ஆய்வக நுட்பநராகவும் மாணவர்கள் செயல்பட்டனர்.  கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக பி.காம் மூன்றாம் ஆண்டு பயிலும் எம். சத்தியமூர்த்தியும், கல்வியியல் கல்லூரியின் முதல்வராக எஸ். சங்கீதாவும் செயல்பட்டனர்.

கல்லூரியை நிர்வகித்த மாணவ மாணவிகளுக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனர் சி. பெருமாள், தலைவர் வள்ளி பெருமாள் மற்றும் முதல்வர்கள் நிர்வாக அலுவலர் ஆகியோர் வழிகாட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT