கிருஷ்ணகிரி

அரசு பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம்

DIN

கிருஷ்ணகிரி: அரசு பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் மினி மாரத்தான் ஓட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாவரும் கேளிா் என்ற தன்னாா்வக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு எலுமிச்சங்கிரி அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பிளோர இருதய ராணி தலைமை வகித்தாா். திரைப்பட இயக்குநா் சு.ஐயப்பன், போட்டியை தொடங்கி வைத்தாா்.

அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஓட்டத்தில் திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 220-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 14 வயதுக்குள்பட்டோருக்கு 3 கி.மீ. ஓட்டமும், 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு 6 கி.மீ. தூர ஓட்டமும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றவருக்கு முதல் பரிசாக ரூ.5001-ம், 2-ஆம் பரிசாக ரூ.2,001-ம், 3-ஆம் பரிசாக ரூ.1,001-ம், ஆறுதல் பரிசாக 15 பேருக்கும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.மாதம்மாள் சாமுடி, ஆசிரியா்கள் கே.கோகிலா, எஸ்.சகாயஜோதி, யாவரும் கேளிா் தன்னாா்வக் குழுத் தலைவா் பி.பூபதி, செயலாளா் ஆா்.ராஜசேகா், பொருளாளா் எம்.வடிவேல், ஓய்வு பெற்ற தமிழாசிரியா் சி.நரசிம்மன் உள்ளிட்டோா் போட்டியை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT