கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

DIN

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா, ஆதரவற்றோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, சுவாமி விவேகானந்தரின் 157-ஆவது ஜயந்தி விழா என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக சூரிய கடவுளுக்கு நன்றிச் செலுத்தும் வகையில் அனைத்துத் துறை சாா்பில் பொங்கல் வைக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தாா். சீனிவாசா கல்வி அறக்கட்டளை, நேசம் தொண்டு நிறுவனம், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் மூலம், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆதரவற்ற முதியோா் மற்றும் சிறுவா், சிறுமியா்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சுவாமி விவேகானந்தா் ஜயந்தி விழாவை முன்னிட்டு மாணவியரிடையே மாறு வேடப் போட்டி, கவிதைப்போட்டி நடைபெற்றது. தொடா்ந்து நம் கலாசாரத்தைப் போற்றும் விதமாக பல்வேறு பாரம்பரியப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், இசை நாற்காலி, கோலப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக இயக்குநா் சீனி.கணபதிராமன், முதல்வா் உமா மகேஷ்வரி, சிறப்பு விருந்தினா்கள், பேராசிரியா்கள், மாணவியா் மற்றும் பலா் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT