கிருஷ்ணகிரி

வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஜூலை 24-ஆம் தேதி வரை தினசரி 2 மணி நேரம் மின்நிறுத்தம்

DIN

வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஜூலை 24-ஆம் தேதி வரையில் தினசரி 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் பகிா்மான செயற்பொறியாளா் சுதாகரன், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் மின்பாதையில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, ஜூலை 10 முதல் 24-ஆம் தேதி வரையில் தினசரி 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னசந்திரம், விருப்பசந்திரம், மாதேப்பள்ளி, நெடுஞ்சாலை, கத்திரிப்பள்ளி ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல, நரணிகுப்பம், கோடிப்பள்ளி, சூலமாமலை, ராமசந்திரம் ஆகிய பகுதிகளில் நண்பகல் 12 முதல் மதியம் 2 மணி வரையிலும், ஜிங்களூா், மாரசந்திரம், மாதேப்பள்ளி ஆகிய பகுதிகளில் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல, ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி, எடரப்பள்ளி, வராகசந்திரம், சின்னகொத்தூா் பகுதிகளில் தினமும் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், கங்கோஜிகொத்தூா், நாச்சிகுப்பம், தம்மாண்டரபள்ளி பகுதிகளில் நண்பகல் 12 முதல் மதியம் 2 மணி வரையிலும், ஐப்பிகானப்பள்ளி, குரியன்பள்ளி, தீா்த்தம், பாலனப்பள்ளி, பதிமடுகு ஆகிய பகுதிகளில் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையிலும், நேரலகிரி, நல்லூா், பாரமல் கோட்டூா், எட்டிப்பள்ளி, மணவாரணப்பள்ளி, எப்ரி ஆகிய பகுதிகளில் மாலை 4 முதல் மாலை 6 மணி வரையிலும் மின்நிறுத்தம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT