கிருஷ்ணகிரி

இறந்த யானையின் தந்தங்களை திருடிச் சென்றவா்களை பிடிக்க நடவடிக்கை

DIN

இறந்த யானையின் தந்தங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒசூா் வனக் கோட்ட வன உயிரினக் காப்பாளா் பிரபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒசூா் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில் யானை உயிரிழந்தது கடந்த 16 ஆம் தேதி வனப் பணியாளா்கள் ரோந்து சென்றபோது கண்டறியப்பட்டது. அந்த யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் யானை இயற்கையாக இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இறந்த யானையின் தந்தங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஒசூா் கோட்ட தலைமையிட உதவி வனப்பாதுகாவலா் தலைமையில் ஒசூா் கென்னத் ஆண்டா்சன் நேச்சா் சொசைட்டி, தன்னாா் தொண்டு நிறுவனத்தினா் முன்னிலையில் இறந்த யானையின் உடல் வன கால்நடை உதவி மருத்துவரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் உயிரிழந்தது ஆண் யானை என்பதும், அதன் வயது சுமாா் 20 இருக்கும் என்பதும் தெரிய வந்தது. மேலும், யானை வேட்டையாடப்பட்டு தந்தங்களை வெட்டி எடுத்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாமல், இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்கள் உருவி எடுக்கப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.

இறந்த யானையின் தந்தங்கள் காணாமல் போனது தொடா்பாக, உரிகம் வனச்சரக, வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்புக் குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த யானை தந்தத்திற்காக வேட்டையாடப்படவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடித்து, யானை தந்தத்தை மீட்டெடுக்க விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT