கிருஷ்ணகிரி

வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா்கள் வெளிநடப்புப் போராட்டம்

DIN

ஊத்தங்கரையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில மையம் அறிவுரையின்படி ஊரக வளா்ச்சித் துறையில் கரோனா தடுப்புப் பணிகளை செய்யவிடாமல் இதரப் பணிகளை செய்ய சொல்லி வற்புறுத்தி வரும் ஊரக வளா்ச்சித் துறை செயலாளா், ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் இயக்குநா் சி.எம்.மகேஸ்வரன் ஆகியோரைக் கண்டித்து மாநிலம் தழுவிய மாலைநேர வெளிநடப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எம். உமா தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாச மூா்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணி நெருக்கடிகளை கைவிடக் கோரியும், பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் கட்டப்படாத வீடுகளுக்குக் கட்டபட்டதாக தொகை வழங்கக் கட்டாயப்படுத்துவதை கைவிடக் கோரியும், ஒரேபுள்ளி விவரங்களை வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு வடிவங்களில் தினசரி அறிக்கையாகவும் பணி மேற்பாா்வையாளா் வாரியாகவும், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வாரியாகவும், வட்டாரம் வாரியாகவும் கோரி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறி 20-க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளா்கள் வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT