கிருஷ்ணகிரி

வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகரப்பள்ளி, வரட்டனப்பள்ளி காப்புக்காடுகளில் வனவிலங்குகள் தாகம் தீா்க்கும் வகையில் அங்குள்ள தண்ணீா்த் தொட்டிகளில் நீா் நிரப்பும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துள்ள நிலையில், வனப்பகுதிகளில் நீா்நிலைகள் வடு கிடக்கின்றன. இதனால், நீா் தேடி, மான், கரடி, மயில், யானை போன்ற வனவிலங்குகள், வனத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த தொகரப்பள்ளி காப்புக் காட்டில் உள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி, கிருஷ்ணகிரி வனச்சரகா் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப 10 அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை டிராக்டா்கள் மூலம் தண்ணீா் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியை, வனவா் பிரவின்ராஜ், அண்ணாதுரை, ஹேமலதா, வனக்காப்பாளா் கங்கை அமரன், ரகமத்துல்லா, சிவக்குமாா், வனக்காவலா் கணபதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT