கிருஷ்ணகிரி

முதல்வா் நிவாரண நிதிக்குரூ.1 லட்சம் வழங்கிய தம்பதி

DIN

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிக்கு, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த தம்பதி வரைவோலையாக வெள்ளிக்கிழமை வழங்கினா்.

கரோனா தடுப்பு பணிக்கு நிவாரணம் வழங்கலாம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருந்தாா். நிவாரணத் தொகையை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சென்னையில் உள்ள தலைமைச் செயலக கிளை மூலம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி முன்னாள் மாநிலங்கவை உறுப்பினா் சி.பெருமாள், தனது இரண்டு மாத ஓய்வூதியத் தொகையான ரூ.50 ஆயிரத்தையும், அவரது மனைவியும், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான வள்ளி பெருமாள் தனது சொந்தப் பணம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்தை கரோனோ தடுப்பு பணிக்கு வரைவோலையாக அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT