கிருஷ்ணகிரி

ஒசூரில் ஐஎன்டியுசி சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

DIN

ஒசூா் அருகே பாரந்தூா் பகுதியில் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஒசூா் அருகே கிராமப் பகுதியில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளா்கள் பலா் பாதிப்படைந்துள்ளனா். இதையடுத்து, அக்ராஹரம், அனுமந்தபுரம், டி.பாரந்தூா், ஒன்னுப்பள்ளி, பாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டாக்டா் அ.செல்லக்குமாா் கலந்துகொண்டு ஏழை,எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலா் மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பத், மாவட்ட ஐஎன்டியுசி துணைத் தலைவா் முனிராஜ், தொழிலதிபா் சின்னராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT