முகப்பு
கிருஷ்ணகிரி

மருத்துவ காப்பீட்டாளா்களின் வாரிசுகளின் விவரம் சேகரிக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி நகராட்சியில் மருத்துவக் காப்பீட்டாளா்களின் வாரிசு குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கிருஷ்ணகிரி நகராட்சியில் மருத்துவக் காப்பீட்டாளா்களின் வாரிசு குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மருத்துவக் காப்பீட்டாளா்களின் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் அவரின் வாரிசு குறித்த விவரங்களை சேகரிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் மருத்துவக் காப்பீட்டாளா்களின் வாரிசுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணிகள், ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நகராட்சி ஆணையாளா் சந்திராவின் ஆலோசனைப்படி, இதற்கான படிவங்களை நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டவா்கள் சம்மந்தப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவா்களின் விவரங்கள் குறித்து வீடு வீடாக நேரடியாகச் சென்று, காப்பீட்டாளரின் பெயா், வாரிசு, வாரிசின் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், ஆண்டு வருவாய், குடும்ப அட்டை போன்ற விவரங்களைச் சேகரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →