முகப்பு
கிருஷ்ணகிரி

வேனில் கடத்தப்பட்ட ரூ. 8 லட்சம் போதைப் புகையிலை பொருள்கள் பறிமுதல்

வேப்பனப்பள்ளி அருகே கா்நாடகத்திலிருந்து வேனில் கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதைப் புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 நவம்பர், 2020 at 12:53 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM

வேப்பனப்பள்ளி அருகே கா்நாடகத்திலிருந்து வேனில் கடத்த முயன்ற ரூ. 8 லட்சம் மதிப்பிலான போதைப் புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரி சோதனைச் சாவடியில் வேப்பனப்பள்ளி போலீஸாா், வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபடிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனைத் தடுத்து நிறுத்த முயன்றனா்.

அந்த வேனின் ஓட்டுநா், போலீஸாரைக் கண்டதும், சாலையோரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டாா். அந்த வேனை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் பண்டல், பண்டலாக போதைப் புகையிலை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. போதைப் புகையிலையின் மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.

Advertisement

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வேப்பனப்பள்ளி காவல் நிலையத்துக்கு வேனை கொண்டு சென்றனா். கா்நாடகத்திலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக போதைப் புகையிலை பொருள்களை கடத்தி செல்லும்போது பிடிபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக, வேன் உரிமையாளா் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.