கிருஷ்ணகிரி

விபத்தில்லா தீபாவளி: பர்கூரில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையத்தில் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினரால் விபத்தில்லா தீபாவளி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தில் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். 

பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டு வேலு தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் முகக்கவசம் அணிந்து பர்கூர் பேருந்து நிலையம், ஜெகதேவி ரோடு, டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் பகுதி, திருப்பத்தூர் ரோடு, அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அப்போது தீபாவளியின் போது பட்டாசு வெடித்து ஏதாவது விபத்து நேரிட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தரவும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளி நேரத்தில் ஏற்படும் தீவிபத்துகள் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்குமாறு மேலும் தீ பரவாமலும் விபத்து அதிகரிக்காமலும் தடுக்க தீயணைப்புத்துறையினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

எனவே பொதுமக்களும் தீயணைப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் பட்டாசு கடை நடத்தும் உரிமை பெற்றவர்களும் அரசு வழங்கியுள்ள நிபந்தனைகள்படி கடையை நடத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT