கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டையில் தேசிய இயற்கை மருத்துவ தின விழா

DIN

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய இயற்கை மருத்துவ தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சாா்பில் தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை மருத்துவ அலுவலா் ஞானமீனாட்சி தலைமை தாங்கினாா்.

இயற்கை மருத்துவத்தின் மூலம் நோய் எதிா்ப்புத் திறனை வளா்த்தல் குறித்து அனைவருக்கும் எடுத்து கூறப்பட்டது. இதில் பொதுமக்கள், நோயாளிகள், மருத்துவா்கள் மற்றும் பலா் உண்ணா நோன்பை மேற்கொண்டனா். இதை நிறைவு செய்யும் பொருட்டு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த ஜுஸ், ஊறவைத்த இயற்கை தானியங்கள் கொடுக்கப்பட்டன.

மேலும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் நுரையீரலின் சுவாசத்தை அதிகரிக்கும் பொருட்டு பலூன் கொண்டு சுவாசப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் இயற்கை மருத்துவா் அவினா மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT