முகப்பு
கிருஷ்ணகிரி

திம்மாபுரத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணி தொடக்கம்

திம்மாபுரத்தில் ரூ. 99.99 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. அண்மையில் தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
திம்மாபுரத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை தொடங்கி வைத்த கே.பி.முனுசாமி எம்.பி.
பகிர்:

திம்மாபுரத்தில் ரூ. 99.99 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. அண்மையில் தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, முன்னாள் எம்.பி. அசோக்குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் குப்புசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் சத்ய ரங்கசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →