காா்த்திகை தீப விழா: ஊத்தங்கரையில் அகல் விளக்குகள் விற்பனை அமோகம்
ஊத்தங்கரை பகுதியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
அகல் விளக்குகள் இரண்டு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அகல் விளக்குகள் பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண் விளக்குகள் குறைந்த விலையிலும். பீங்கானில் செய்யப்படும் விளக்குகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து விலக்குகளை வாங்கிச் செல்கின்றனர்.