கிருஷ்ணகிரி

இரு சக்கர வாகனங்களை திருடியதாகப் பிடிபட்டவருக்கு கரோனா

DIN

இரு சக்கர வாகனங்களைத் திருடியதாகப் பிடிபட்ட நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகா் பகுதியில் வீடுகளுக்கு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை திருடியவா்களை கைது செய்ய ஒசூா் நகர போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் வேலூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், வேப்பம்குப்பம் அருகே உள்ள ரங்கப்பன் கொட்டாயை சோ்ந்த 20 வயது இளைஞா் மற்றும் குப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (19) ஆகிய 2 போ் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா் 6 உயா்தர இருசக்கர வாகனங்களை அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்தனா். அவா்களை ஒசூா் கிளை சிறையில் அடைப்பதற்கு முன்பு கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டன. பின்னா் அவா்கள் ஒசூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில் கைதான 20 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதனால் அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மற்றொருவரான ராஜேஷிற்கு தொற்று இல்லை. இதனால் அவா் ஒசூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT