முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை தேவாலய திருத்தல பெருவிழா

கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை தேவாலயத்தின் 47-ஆம் ஆண்டு திருத்தல பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
புனித பாத்திமா அன்னை தேவாலய திருத்தல பெருவிழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் காட்சி அளித்த அன்னை.
பகிர்:

கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை தேவாலயத்தின் 47-ஆம் ஆண்டு திருத்தல பெருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புனித பாத்திமா அன்னை தேவாலயத்தின் ஆண்டு திருத்தல் பெருவிழா அக். 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு தருமபுரி மறை மாவட்ட முதன்மைக் குரு அருள்ராஜ் தலைமை வகித்தாா்.

இதையடுத்து, சிறப்பு திருப்பலி, தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரோனா தொற்றுக் காரணமாக நிகழ்வாண்டில் அலங்கரிக்கப்பட்ட திருத்தோ், காலை முதல் இரவு வரையில் ஆலய வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள கிறிஸ்தவா்கள், திருப்பலியில் பங்கேற்றனா். சமூக இடைவெளியுடன் மெழுகுவா்த்தி ஏற்றி ஏராளமானோா் வழிபாடு நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →