முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் முன்னேற்பாடுகள்: அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.

Updated On : 16 மார்ச், 2026 at 11:31 AM
அர்ச்சனா பட்நாயக்.
பகிர்:

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 5.69 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பான ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

எந்த வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும். விடுமுறை நாள் தவிர அனைத்து நாள்களிலும் வேட்புமனு பெறப்படும்.

Advertisement

மார்ச் 30 முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம்.

மார்ச் 26ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமேன பிரசாரம் செய்யலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே பிரச்னைகளுக்கு அனுமதி கேட்கப்பட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

summary

Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has given a briefing on the election preparations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.