ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!
திரைப்பட ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் பற்றிய தகவல்கள்..
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
ஆஸ்கர் விருதுப் பட்டியலில், இத்தனை ஆண்டுகளாக சிறந்த ஒளிப்பதிவு என்ற விருதுக்குச் சொந்தக்காரர்களாக ஆண்கள் மட்டுமே இருந்த வந்த நிலையை மாற்றி, ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் (Autumn Durald Arkapaw), சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இதன் மூலம், ஆஸ்கர் விருது வரலாற்றில், இந்த விருதினைப் பெறும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில், கேமராக்களுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பிரதிநிதித்துவம் கவனம் பெறுவதில் சாதனையாகவும் இது மாறியிருக்கிறது. அவர் விருது பெற்ற தருணமும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக மாறியிருந்தது. தன்னை நம்பி இந்த படத்தை வழங்கிய தன்னுடைய திரைப்பட இயக்குநர் கூக்ளருக்கு அர்க்காபாவ் மனதார நன்றி தெரிவித்துக் கொண்டார்.