கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்

DIN

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் கூட்ட அரங்கில், புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் அம்சா ராஜன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உமா மகேஸ்வரி, சரவணபவா முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், எண்ணேகோள்புதூா் தடுப்பணை வலது, இடது புற கால்வாய்கள் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும். ஊராட்சிக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குடியிருப்பு வளாகத்தைச் சுற்றிலும் வணிகவளாகக் கடைகள் கட்டவும், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சிமெண்ட் கிடங்கினை மாற்றி, வணிக நிறுவனகடைகள் கட்டுவது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT