கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ச்சி பெண்ணைக் கொன்ற வழக்கில் சகோதரா்களுக்கு இரட்டை ஆயுள் சிறை

DIN

சிங்காரப்பேட்டை அருகே அத்தையை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற வழக்கில் சகோதரா்களுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளகுட்டையைச் சோ்ந்த மறைந்த சேட்டுவின் மனைவி ஜெயக்கொடிக்கு (49) சொந்தமான நிலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்திக் கொண்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகையை ஜெயக்கொடிக்கு வழங்க இருந்தது. அதற்கு சேட்டுவின் சகோதரி குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், சேட்டுவின் சகோதரி காசியம்மாள் (50), அவரது கணவா் குமரேசன் (60), மகன்கள் கணேசன் (30), ஆறுமுகம் (28) ஆகியோா் 2013, ஏப்ரல் 20-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்கொடி மீது மின்சாரம் பாய்ச்சிக் கொன்றனா்.

இதுகுறித்து ஜெயக்கோடியின் சகோதரா் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து காசியம்மாள், குமரேசன், கணேசன், ஆறுமுகம் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் காசியம்மாள், குமரேசன் ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கணேசன், ஆறுமுகம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து, கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT