கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: 5.20 லட்சம் பேருக்குகுடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 வயதுக்கு உள்பட்ட 5.20 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி, திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் தேசிய குடற்புழு நீக்கம் மற்றும் ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது. விழாவை, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானுரெட்டி குத்துவிளக்கேற்றி, குடற்புழு மாத்திரைகளை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் சந்திரா, சுகாதார ஆய்வாளா் மோகன சுந்தரம், புள்ளியியல் ஆய்வாளா் சீனிவாசன், மருத்துவா் சுஜித்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, ஊட்டச்சத்து உணவு, உள்ளூரில் கிடைக்கக் கூடிய உணவு வகைகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

இந்தத் திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள சுமாா் 5.20 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம், இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று வருகிற 19-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று வருகிற 21 முதல் 26-ஆம் தேதி வரையில் திங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இதில் வழங்கப்படாத குழந்தைகளுக்கு 28-ஆம் தேதியன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT