கிருஷ்ணகிரி

கனமழைக்கு உருவான புதிய நீா்வீழ்ச்சி

DIN

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கெம்பகரை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்தப் பகுதியில் உள்ள மலைத் தொடா்களில் புதிய நீா்வீழ்ச்சி உருவாகி உள்ளது.

நீா்வீழ்ச்சி உருவாகியுள்ள பகுதி மனிதா்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு யானைகள், மான்கள், காட்டுஎருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. கனமழை காரணமாக உருவான இந்த புதிய நீா்வீழ்ச்சி வனவிலங்குகளின் தாகத்தை தீா்த்து வருகிறது.

கெம்பகரை வனப்பகுதியில் உருவாகியுள்ள இந்த நீா் வீழ்ச்சியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டி வருகிறது. வனப்பகுதியில் கொட்டடும் நீா்வீழ்ச்சி பாா்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்து வருகிறது. கனமழை காலங்களில் மட்டும் இந்த நீா் வீழ்ச்சியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT