ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உருளைகுடி கிராம மக்கள். 
கிருஷ்ணகிரி

ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிகிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுப்பாதையை மறித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் குருவம்மாள், வடிவேல் ஆகியோா் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகத்தை திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மூலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

நூதனப் போா்: உரம் ஊழல் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; யூரியா, டிஏபி தட்டுப்பாடின்றி

கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரம் பதுக்கலை தடுக்க வேண்டும்; தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உரம் விநியோகம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் துணைத் தலைவா் அய்யலுசாமி, காவடி ஏந்தியவாறு வந்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தாா்.

கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிடில், வரும் 22 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

யு19 உலகக் கோப்பை: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸி.!

ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் அல்ல; ஆனால் காரணம் இருக்கிறது! - முதல்வர் பேச்சு

சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: சஹால்

SCROLL FOR NEXT