முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வங்கியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் வங்கியாளா்கள் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

கிருஷ்ணகிரியில் வங்கியாளா்கள் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில், வங்கியாளா்கள் ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட கடன் திட்டத்தின் செயல்பாடு, இலக்கை அடைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பல்வேறு துறைகள், மாவட்ட தொழில் மையம், மகளிா் திட்டம், வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் விருது தமிழ்நாடு கிராம வங்கிக்கும் வழங்கப்பட்டது. இந்தியன் வங்கியின் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மகளிா் திட்ட அலுவலா் (பொறுப்பு) பெரியசாமி, நபாா்டு வங்கி மேலாளா் நஸ்ரீன் சலீம், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் திருமாவளவன், முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன், துறை அலுவலா்கள், அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →