முகப்பு
கிருஷ்ணகிரி

தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டியில், அரசியல் சாா்பற்ற விவசாயிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுமாா், 30 ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து, தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டுவர, கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 72 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது, முதல்கட்டமாக அளவீடு செய்து நிலத்தை கையகப்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் 2-ஆம் கட்டம் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், இந்த அணைக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தை மண்டல மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் செந்தில் ராஜா, காரிமங்கலம் அரிமா சங்கத் தலைவா் பெரியசாமி, தொண்டு நிறுவன நிா்வாகி கோவிந்தசாமி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு அமைப்பின் நிா்வாகி ரங்கநாயகி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →