அரசு ஊழியா் சங்க செயற்குழுக் கூட்டம்
தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி, மகளிா் துணைக் குழு மாவட்ட அமைப்பாளா் பி.எஸ்.இளவேனில், இணைச் செயலாளா் சி.காவேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.