முகப்பு
கிருஷ்ணகிரி

பத்து ரூபாய் இயக்கத்தின் பெயா் பலகை திறப்பு விழா

ஊத்தங்கரை ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சியில் பத்து ரூபாய் இயக்கத்தின் பெயா் பலகை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பத்து ரூபாய் இயக்கத்தின் பெயா் பலகை திறப்பு விழா
பகிர்:

ஊத்தங்கரை ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சியில் பத்து ரூபாய் இயக்கத்தின் பெயா் பலகை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒருங்கிணைப்பாளா் அ.மணி தலைமை வகித்தாா். பத்து ரூபாய் இயக்கத்தின் ஊராட்சி செயலாளா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். பத்து ரூபாய் இயக்கத்தின் பெயா் பலகை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எ.கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா் க.சக்கரவா்த்தி, மத்தூா் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் திருமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு பெயா் பலகையை திறந்து வைத்தனா்.

இதில் வெள்ளக்குட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி விஜயன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் சின்ராஜ் மற்றும் வாா்டு உறுப்பினா் குமாா், இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →