முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துசமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 போ் கைது

குருபரப்பள்ளி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

குருபரப்பள்ளி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 சிறுவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது.

கடந்த 5-ஆம் தேதி அந்தச் சிறுமியை, அந்தச் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இந்தக் காட்சியை, அந்த சிறுவனின் நண்பன் பதிவு செய்து, கிருஷ்ணகிரியில் 9-ம் வகுப்பு பயிலும் மற்றொரு நண்பனின் செல்லிடப் பேசிக்கு அனுப்பி உள்ளாா். இவா்கள், இந்தப் பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று சிறுவா்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →