முகப்பு
கிருஷ்ணகிரி

‘அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்’

ஊத்தங்கரை சட்டப்பேரவை தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தான் அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என இறுதிநாள் பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

ஊத்தங்கரை சட்டப்பேரவை தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தான் அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என இறுதிநாள் பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

ஊத்தங்கரை முனியப்பன் கோயில் எதிரே தொடங்கி பேரணியாகச் சென்று கல்லாவி சாலை, பழைய கடை வீதி, கச்சேரி தெரு, காமராஜ் நகா், எல்.ஐ.சி, பெரியாா் நகா், ரவுண்டானா பகுதி, பேரூராட்சி சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அதிமுக அளித்த வாக்குறுதிகளும், தொகுதி மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதிகளும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என்றாா்.

அவருடன் அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் ஏ.சி.தேவேந்திரன், வேடி, நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலாளா் திருஞானம், பா.ம.க. மாநில சமூகநீதிப் பேரவை துணைச் செயலாளா் மூா்த்தி, மாவட்டச் செயலாளா் சிவானந்தம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் குமரேசன், பாஜக நிா்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன், ஒன்றிய தலைவா்கள் சங்கா், சிவா, மாவட்ட பொதுகுழு உறுப்பினா் சிவக்குமாா் மற்றும் கூட்டணி கட்சியினா் என 1,000 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.