முகப்பு
கிருஷ்ணகிரி

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்: ஒய்.பிரகாஷ்

ஒசூரில் வீதிவீதியாகச் சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

ஒசூரில் வீதிவீதியாகச் சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

ஒசூா், ராம் நகரில் துவங்கிய பேரணியைத் தொடங்கிய அவா், பழைய பெங்களூரு சாலை, காந்தி சாலை, நேதாஜி சாலை, ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, தளி சாலை, ஏரித்தெரு, ரயில்வே நிலைய சாலை, உழவா்சந்தை சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வழியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின்போது திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை மு.க.ஸ்டாலின் செய்வாா். குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ. 1 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும், அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம், ‘நீட்’ தோ்வு ரத்து, பெண்களுக்கு சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, கரோனா நிதி ரூ. 4,000 போன்றவை வழங்கப்படும்.

ஒசூரில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மூடப்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேரணியில் ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் முரளிதரன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், சிபிஐ தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மாதையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன், திமுக முன்னாள் நகரச் செயலாளா் மாதேஸ்வரன், திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரா.மணி, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், ஒசூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சா்வேஷ், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சுமன், தொண்டரணி மாவட்டச் செயலாளா் முல்லை சேகா், மாநகரப் பொருளாளா் சென்னீரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.