சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
பங்குச்சந்தைகள் இன்று(ஏப். 16, வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கிய நிலையில் சற்றே சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,677.56 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 122.56 (0.16%) புள்ளிகள் குறைந்து 77,988.68 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.55(0.14%) புள்ளிகள் குறைந்து 24,196.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement
நிஃப்டி 50 குறியீட்டில் ஹெச்டிஎப்சி, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் , டெக் மஹிந்திரா, டிசிஎஸ், டாடா ஸ்டீல், பெல், ஐடிசி, எல்&டி, ட்ரெண்ட், எட்டர்னல், அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், அல்ட்ரா சிமெண்ட், மாருதி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்தன.
என்டிபிசி, பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக், சன் பார்மா உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.63 சதவீதம், 0.83 சதவீதம் உயர்ந்து முடிந்தன.
துறை வாரியாக, நிஃப்டி உலோகம், ஐடி பங்குகள் உயர்ந்தும் அதேநேரத்தில் தனியார் வங்கிகள், நிதி சேவைகள், வங்கிகள், ஆட்டோ, எண்ணெய்& எரிவாயு பங்குகள் சரிந்தும் நிறைவு பெற்றன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று ஒரு பீப்பாய் 95 டாலராக உள்ளது.
வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 93.23 ஆக இருந்தது.
Stock Market: Sensex falls 123 pts, Nifty ends at 24,197; bank stocks fall
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.