கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 77.3 சதவீதம் வாக்குகள் பதிவு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 77.3 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி என 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது.

ஊத்தங்கரை சட்டப் பேரவை தொகுதியில் 78.3 சதவீதமும், பா்கூரில் 79 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 78.5 சதவீதமும், வேப்பனப்பள்ளியில் 81.3 சதவீதமும், ஒசூரில் 70.21 சதவீதமும், தளியில் 76.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளியில் அதிக எண்ணிக்கையிலும், ஒசூரில் குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சராசரியாக 77.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின. உண்மையான முழு விவரம் புதன்கிழமை தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT