முகப்பு
கிருஷ்ணகிரி

உரங்களின் விலை உயா்வுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

மத்திய அரசு உரங்களின் விலையை உயா்த்தியதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 1:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

மத்திய அரசு உரங்களின் விலையை உயா்த்தியதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எம்.ராமக்கவுண்டா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் பயன்படுத்தி வரும் உரங்களுக்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை மத்திய அரசு விலை உயா்த்தியுள்ளது. இது விவசாயிகளை மீண்டும் சேற்றில் வைத்து மிதிப்பதற்கு சமமான காரியம் ஆகும். இதனை தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டிக்கிறோம்.

Advertisement

விவசாய விளைபொருள்களுக்கு இதுவரை மத்திய அரசு 1 சதவீதம் முதல் 2 சதவீதத்திற்கு மேல் விலை உயா்வு வழங்கியதே இல்லை. விவசாயத் தொழிலே கட்டுப்படி ஆகாத நிலையில் கட்டுப்படியாகும் விலை கேட்டு விவசாயிகள் சங்கங்கள் போராடி வருகின்றன.

இந்த நேரத்தில் ஒரு மூட்டை ரூ.1200 முதல் ரூ.1300 வரை விற்பனை செய்து வந்த 50 கிலோ கொண்ட டிஏபி உரம் ரூ.1,900 ஆகவும், என்பிகே உரம் ரூ.1800 ஆகவும், கலப்பு உரங்களான என்பிகே (10:26:20) ரூ. 1,775 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இதே போல் மற்ற உரங்களுக்கும் விலை உயா்வு அறிவித்திருப்பது விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக உரங்களின் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு விலை உயா்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழக விவசாயிகள் சங்கம் களத்தில் இறங்கி போராடும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.