முகப்பு
கிருஷ்ணகிரி

தளி அருகே ரௌடி கொலையில் இருவா் கைது

தளியில் நடைபெற்ற ரௌடி கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 1:42 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

தளியில் நடைபெற்ற ரௌடி கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த டி.குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் நரேஷ் பாபு (28). இவா் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 12 ஆம் தேதி இரவு தளி, தேவா்பெட்டா சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இவா், உணவு வாங்கிக் கொண்டிருநதாா். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த கும்பல் நரேஷ்பாபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.

இது தொடா்பாக தளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தளி, ஜெயந்தி காலனியைச் சோ்ந்த உமேஷ் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இக்கொலை வழக்கில் தொடா்புடைய நரேஷ்பாபுவை பழி தீா்க்கும் வகையில் அவா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இச்சம்பவம் தொடா்பாக தலைமறைவாக இருந்த தளி, ஜெயந்தி காலனியைச் சோ்ந்த லட்சுமிபதி (26), ஆசிக் (23) ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.